சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் – 2

நண்பர் ஒருவர் தனது அலுவலகத்திற்குப் புதிதாக இணைய இணைப்பு வாங்க எண்ணினார். ஏற்கனவெ அவரது வீட்டில் 512kbps unlimited வைத்திருக்கிறார், ஏர்டெல். அதன்மீது அவருக்குத் தனி மதிப்பு உண்டு, எனக்கும்தான். அதன் சேவைதான் அவரறிந்தவரை மிகவும் சிறந்ததாம். எப்பொதும் முதல் தேர்வு அதுதானாம். வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார். அதைப் பற்றிப் பேசிய பிறகு, சிறிது மற்ற விசயங்களைப் பற்றியும் பேசினார். அப்படியே விசாரித்துக்கொண்டிருக்கையில் அவர் கேள்விப்பட்ட விசயம் ஒன்றால் ஆடிப்போய்விட்டார். 512kbps unlimitedன் மாத […]

கதையின் சுதந்திரம்

மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா? அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா? அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும். அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா? இல்ல மாப்ள. […]

சிறுகதைப் பட்டறையில் பா.ரா.

சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில் – இதற்கு முன்னால் எழுதியது. சிறுகதைப் பட்டறையில் பா.ராகவன் அவர்களுடைய பகுதி இதோ. பவர் பாயிண்டில் அவர் அளித்ததை முடிந்த அளவு குறிப்பு எடுத்து இங்கு அளித்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கு எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கண்டிப்பாகப் பயன்தரும். — சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயமுள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவமுள்ள நண்பர்களுக்கு இது உதவாது, வார இதழ்களில்/பத்திரிக்கைகளில் எழுத விருப்பம் உள்ளவர்களுக்கே இது. நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது உண்மையை […]

கொலைகள்

கொல் என்றேன்கொல்லென்று சிரித்தாள்கொல்லாமல் கொன்றாள்கொன்றேயிருக்கலாம் அவளென்னைகொன்றால் பாவமாகுமோ?கொல்லாமல் கொன்றால்?கொலைகூடக் காதலாகுமோ?கொன்றிருக்கலாம் அவளைகொல்வதற்கு முந்திவிட்டாள்கொன்றிருந்தால் சிறையறையில்கொல்லப்பட்டதால் மணவறையில் — -ஏனாஓனா. Thank you for reading. 🙂

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – செப்18

தகவல்கள் * Gmail ல ஏற்கனவே பல தீம்கள் வந்திருப்பது நமக்குத் தெரிந்ததே… இப்போது Random Themes வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு Theme ல் gmail உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இங்கு, உங்களுக்குப் பிடித்தமான Theme கலை மட்டும் தேர்வு செய்யும் வசதி இல்லை. * அடுத்து மிகவும் நான் எதிர்பார்த்த ஒன்று. WordPress ல் மிகவும் நீளமான பதிவிற்கு Read More கொடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம், முகப்புப் பக்கம் நீளமாக இருப்பதைத் […]

சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில்

நான் மிகவும் எதிர்பார்த்த சிறுகதைப் பட்டறை, 13-09-2009 (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நடந்தது. இதைப் பற்றி சில பதிவுகள் வந்துவிட்டன. இருப்பினும் எனது பார்வையில் உங்களுக்கு சிறிது கிடைக்கலாம் என்பதற்காக இந்தப் பதிவு. சொன்னதுபோல மொத்தம் 4 எழுத்தாளர்கள் பேசினார்கள். முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள்இவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டது:* நிறைய படிக்கனும்* ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அதையே தொடரலாம். நல்லா இருக்குன்னு பிறர் சொன்னதற்காக, நமது மண்டையில் ஏறாதவற்றை திணிக்க முயல வேண்டாம்.* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்.* […]