நண்பர் ஒருவர் தனது அலுவலகத்திற்குப் புதிதாக இணைய இணைப்பு வாங்க எண்ணினார். ஏற்கனவெ அவரது வீட்டில் 512kbps unlimited வைத்திருக்கிறார், ஏர்டெல். அதன்மீது அவருக்குத் தனி மதிப்பு உண்டு, எனக்கும்தான். அதன் சேவைதான் அவரறிந்தவரை மிகவும் சிறந்ததாம். எப்பொதும் முதல் தேர்வு அதுதானாம். வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டார்.
அதைப் பற்றிப் பேசிய பிறகு, சிறிது மற்ற விசயங்களைப் பற்றியும் பேசினார். அப்படியே விசாரித்துக்கொண்டிருக்கையில் அவர் கேள்விப்பட்ட விசயம் ஒன்றால் ஆடிப்போய்விட்டார். 512kbps unlimitedன் மாத வாடகை 1099 ரூபாயாம். அதிலென்ன இருக்கிறது? அவர் சொன்னது கேட்டு எனக்கும் அதிர்ச்சி. அவர் செலுத்திக்கொண்டிருப்பது மாதம் 1600 + வரி, மொத்தம் 1800 ரூபாய் வருகிறது.
நடந்தது என்ன்வென்றால், நண்பர் இணைப்பு வாங்கும்போது இருந்த திட்டம் அதுதான். இப்போது மாற்றியிருக்கிறார்கள் (எப்போது என்பது தெரியவில்லை, 8 மாதங்களுக்கு முன்பு என்பது எனது கணிப்பு). பின்பு ஆரம்பித்த வேலையை விட்டுவிட்டு, தனது வீட்டிலுள்ள இணைப்பின் திட்டத்தை 1099+வரிக்கு மாற்றுவதற்குப் பேச ஆரம்பித்துவிட்டார். இப்போது, அதே சேவை 1800லிருந்து 1200 ரூபாய்க்கு மாற்றியாயிற்று. மாற்றாமல் இருந்திருந்தால்?
ஏர்டெல் வெகுநாட்களாக வைத்திருப்பவர்கள், நீங்கள் வைத்திருக்கும் திட்டத்தை, தற்போதிருக்கும் திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அதிகம் பணம் செலுத்திகொண்டிருக்கலாம். ஆனால், இது ஏர்டெல்லுக்குத் தெரியுமா என்பதுதான் தெரியவில்லை.
—
-ஏனாஓனா.
இது கவனக்குறைவா இல்லை திட்டமிட்ட சதியா?
இதே அனுபவம் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.
இது இந்தியாவில் தொழில் செய்யும் முதலாளிகளின் மனோபாவம். அவர்கள் ஏமாற்ற முனையும் முன் நாம் ஏமாற தயாராக இருப்பதை அவர்கள் அறிவார்கள். பிற நாடுகளில் இது போன்ற முறை கேடுகளை அரசும் அனுமதிப்பதில்லை…
இந்திய மக்களின் மனோபாவங்கள் மாற வேண்டும். அவன் தொழிலாளியாக இருந்தாலும், முதலாளியாக இருந்தாலும் மாறியே ஆக வேண்டும்.
இது மாதிரி எல்லா ஆட்களும் செய்கிறார்கள்.. அடிக்கிற வரை.. அடிக்கலாமே..?
// ஆனால், இது ஏர்டெல்லுக்குத் தெரியுமா என்பதுதான் தெரியவில்லை. //
நல்லா தகவல்… தல.. தொடர்ந்து கலக்குங்க….
//பிரியமுடன்…வசந்த் said…
இது கவனக்குறைவா இல்லை திட்டமிட்ட சதியா?//
தெரியவில்லை வசந்த்.
வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி ரோஸ்விக்.
//இந்திய மக்களின் மனோபாவங்கள் மாற வேண்டும். அவன் தொழிலாளியாக இருந்தாலும், முதலாளியாக இருந்தாலும் மாறியே ஆக வேண்டும்.//
சரியாகச் சொன்னீர்கள், மக்களுக்கு விழிப்புனர்வு இல்லாததே இதற்குக் காரணம், நாம் மாறினால் அவர்கள் தன்னால் மாறுவார்கள்.
//Cable Sankar said…
இது மாதிரி எல்லா ஆட்களும் செய்கிறார்கள்.. அடிக்கிற வரை.. அடிக்கலாமே..?//
சரிதான் கேபிள்ஜி. பார்க்கிறவரை லாபம் என்கிற மனோபாவம்தான் எல்லோருக்கும்.
நன்றி.
// Sukumar Swaminathan said…
நல்லா தகவல்… தல.. தொடர்ந்து கலக்குங்க….//
நன்றி சுகுமார்.
//யாருக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அதிகம் பணம் செலுத்திகொண்டிருக்கலாம். //
தனியார் என்றில்லை…இதே சங்கடங்கள் bsnl ல் இருக்கிறது….
நல்ல தகவல் பகிர்வு அன்பரே..
ம்ம்ம். நான் இப்போ ஜைலாக்(zyloag) தான்… ஃப்ரீ பெய்ட்..550 Per Month, unlimited, 1 MBps Speed.. நல்லா இருக்கு. ஆனா எல்லா ஏரியாவிலேயேயும் கிடைக்காது..
ஹி ஹி இது மாதிரி விஷயங்களுக்கு ரிலையன்ஸை யாரும் ஜெயிக்க முடியாது
வருகைக்கு நன்றி ராஜ்.
ஜைலாக் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லலாமே!
நன்றி கிகி,
உங்க அனுபவத்த சொன்றீங்களோ!
//நன்றி கிகி,
உங்க அனுபவத்த சொன்றீங்களோ!\
ஹி ஹி ஆமா
ம்ம்ம்ம்
//☀நான் ஆதவன்☀ said…
ம்ம்ம்ம்//
ரைட்டு மாப்பி.
என்ன கொடும சார் இது!
//வால்பையன் said…
என்ன கொடும சார் இது!//
ஆமா வால், நம்பினவங்களே இப்படிப் பண்ணும்போது வருத்தமா இருக்கு.