தேன்கூடு – 2009/10/22

கூகுள் தகவல்கள் கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா… இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் – தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய […]

பேரு வைக்கிறதுக்கு ஒரு அக்கப்போரா?

ஏற்கனவே வானவில் வந்த கதை உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். தெரியாதுன்னா இங்க போயி பாத்துக்குங்க. அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் […]

வெள்ளை மின்னலே…!

நீ என் அகத்திற்கு வருகிறாய் என்றதும் என் அகத்தின் உவகை உலகறியாதது. குறுகுறுப்புடனும் கூதுகலத்துடனும் காத்திருந்தேன் கண்மணியே, ஈராறு நாட்கள் பலநூறு யுகங்கள் போல்! என் தந்தை தமையனுடன் தவழ்ந்து வந்த தேரில்(காரில்) நீ வந்திறங்கியபோது – உன் வதனம் கண்டு ஒரு தேவதை என்றே எண்ணியது என் மனம். உனைப் பாராமல் உன் மேல் நான்கொண்ட ஈர்ப்பு உனைக் கண்டதும் பல மடங்கானது . கண்டதும் ஓடி வந்து கட்டியணைக்க வேண்டுமென்ற அவாவை கட்டுப் படுத்தினேன் […]

Gmailல் Multiple Signature

Gmailல் Multiple Signature சாத்தியமா? இந்த மாதிரி கேள்வி உங்களுக்கும் இருக்கா? Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை கனெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா? அப்போ மேல (கீழ) படிங்க. ஒன்றுக்கும் மேற்பட்ட Email id களை Gmail ல் பிணைத்து வைக்கும் வசதி இருப்பது ஏற்கனவே தெரிந்த்தே. நான் 5 Email id களை வைத்திருக்கிறேன். Gmail Inbox லேயே எல்லாம் வந்து கொட்டிவிடும். Send பண்ணுவதும் இங்கிருந்தே தேவைப்படும் ஐ.டி. களின் மூலம் அனுப்பி […]

வானவில் – 2009/10/12

கொத்துபரோட்டா, பஞ்சாமிர்தம், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், காக்டெயில், மிக்ஸர், மானிட்டர் பக்கங்கள், அவியல், குவியல், டரியல், என்’ணங்கள், டிபன் (இட்லி, வடை, பொங்கல்….), மிக்ஸ்டு ஊறுகாய், மிக்ஸ்டு ஃப்ரைடு ரைஸ்  இப்படி பல பேர் பல தலைப்புல கலவைப் பதிவுகளை எழுதுறாங்க. நான் கூட எழுதிட்டுதான் இருக்கேன் (உண்மையாத்தான்), அது எத்தன பேருக்குத் தெரியும்னு தெரியல. ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் – எங்கையோ பாத்த தலைப்பு மாதிரி இருக்கா? இதுதான் நம்ம கலவைப் பதிவின் […]

கல்லூரி பூக்கள்

அழகிய கல்லூரி பூக்களில் கல்வியே சிறந்தது என கற்கும் சில, காதல்தான் எல்லாம் என அலையும் சில, கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில, கீழான பழக்கங்களால் வருத்தும் சில, குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா கூட்டம் கூடியே அழியும் சில- தானும் கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில, கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில, கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில, கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில, கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில, கெளரவமாய் நடந்து […]