2009 தீபாவளி கடந்து நாட்களாகிவிட்டாலும், அன்புத் தம்பி அன்புத்தம்பி அழைத்ததற்காக இந்த தீபாவளி் தொடர் பதிவு.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
சிறு குறிப்பு என்ன, கொஞ்சம் பெருசாவே தெரிஞ்சுக்குங்க. இங்க, இங்க, இங்க, இங்கயெல்லாம் போய் பாத்து தெரிஞ்சுக்கலாம். (இன்னும் ரெண்டு தொடர் பதிவு எழுதினா நம்ம ஜாதகமே நெட்டுல வந்துரும் போல இருக்கு…)
2)தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
கல்லூரி மூன்றாம் ஆண்டில் வந்த தீபாவளி. எப்போதும் இல்லாது அந்த வருடம் நண்பர்கள் பலபேர் ஆஜர். காலை முழுதும் ’உற்சாகமாய்’ ஊரையே ரவுண்டு கட்டி வந்தோம். பின் மதியம் அஜீத்தின் வில்லன் படம். ஆட்டம்னா ஆட்டம் செம ஆட்டம். ”ஆடியில காத்தடிச்சா” சோகப்பாட்டுக்கு கூட குத்து குத்துனு குத்துனத, அன்னைக்கு உடன் இருந்த யாராலயும் மறக்க முடியாது.
3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
சென்னை.
4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்?
இங்க நோ கொண்டாட்டம். ஒன்லி வாச்சிங்.
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
இதுக்கும் இல்லை.
6)உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
அய்யோ அய்யோ…
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
செல்லிடபேசி.
8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
வழக்கமாக தொலைக்காட்சி பார்ப்பது குறைவே. தீபாவளி அன்று வெளியில் செல்ல பயம். எங்கு எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வோரு விதமாகப் போயிற்று. இந்த வருடம் சமையல், கணினி, டிவி, வேடிக்கை என பொழுது போனது. வெளியில் செல்லவில்லை.
9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?
ரொம்ப நாள் ஆயிடுச்சு. அடுத்த வருடம் கூப்பிட்டுக்கவா?
அன்பு, கோபப்படக்கூடாது. உண்மையிலேயே பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லைதான். 4 வருடங்களுக்கு முன் சொந்த ஊரில் இருக்கும்போது கேட்டிருந்தால் கூட சில பதில்கள் உருப்படியா வந்திருக்கும். சென்னையில் இருக்கும்வரை, எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு விடுமுறை நாள், அவ்வளவே.
-அதி பிரதாபன்.
// எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு விடுமுறை நாள் //
பெரியவங்களுக்கு எல்லாம் அப்படி தான்.
தீபாவளியோட அருமை ஸ்கூல் படிக்கிறவங்களுக்கு தான் புரியும். கல்லூரியில் நண்பர்கள் கூப்பிடும் தூரத்தில் இருந்தால்.. ஓரளவுக்கு தீபாவளியின் அருமை தெரிய வாய்ப்பிருக்கு.
அதுக்கு அப்புறம் திடீரென்னு எல்லாரும் பெரிசா வளர்ந்துடுறாங்க. அப்புறம் எல்லா விடுமுறை நாளும் ஓய்வையே எதிர்பார்க்கின்றன.
நீங்களும் வளர்ந்துட்டீங்க 'அதி'.
😀
nalla irundhunga… romba simple ah super ah irundhudu 🙂 🙂
padhivar sandhipu la meet pannuvom 🙂
நன்றி சாம்ராஜ்ய ப்ரியன்,
சரிதான். நண்பர்கள் அருகில் இல்லாது என்ன தீபாவளி?
//நீங்களும் வளர்ந்துட்டீங்க 'அதி'//
நோ உசுப்பேத்தல்…
நன்றி கனகு,
கண்டிப்பா சந்திப்போம்.
உன் ஜாதகமே என் கையிலேன்னு இனி யாருவேணாலும் அதிபிரதாபனை மிரட்டலாம் போலயே.. 🙂
//சென்னையில் இருக்கும்வரை, எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு விடுமுறை நாள், அவ்வளவே.//
துபாயில் இருக்கும்வரை, எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு அலுவலக நாள், அவ்வளவே.
ம்ம்ம்ம்…சரீஈஈஇ
🙂
ஆடியில காத்தடிச்சா…!
பதிவைப் படிக்கும்போது பாட்டுதான் மனசுல ஓடுது! ரொம்ப சோகமா இருக்கே நம்ம தீபாவளி? என்னாச்சு மாப்?
இந்த வெடி விஷயத்துல எனக்குப் பயம்தான். எப்ப வந்ததுன்னு யோசிச்சிப் பார்த்தா… நான் வெடிக்கிறதை நிறுத்தினதுக்கப்புறம்…
நன்றி முத்துலெட்சுமி,
//உன் ஜாதகமே என் கையிலேன்னு இனி யாருவேணாலும் அதிபிரதாபனை மிரட்டலாம் போலயே.. :)//
அட ஆமாங்க… நேத்து வந்த என் ஜாதகமே இப்படி ஓபனா இருக்கு. நம்ம மூத்த பதிவர்களுக்கெல்லாம் முழுசாவே இருக்கும்னு நினைக்கிறேன்.
அதுக்குத்தான் சிலர் தொடர் பதிவே எழுதுறது இல்ல போல இருக்கு.
🙂
நன்றி ஆதவா,
//துபாயில் இருக்கும்வரை, எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு அலுவலக நாள், அவ்வளவே.//
அன்னைக்கும் வெட்டியாத்தான் இருப்பியா?
நன்றி தண்டோரா.
நன்றி வால்.
நன்றி ஜெகநாதன்,
//ரொம்ப சோகமா இருக்கே நம்ம தீபாவளி? என்னாச்சு மாப்?//
சோகமெல்லாம் இல்ல மாம்ஸ். இதுவும் மத்த நாள் போலத்தான். நார்மலா போச்சு.
நன்றி ஷங்கி,
//இந்த வெடி விஷயத்துல எனக்குப் பயம்தான். எப்ப வந்ததுன்னு யோசிச்சிப் பார்த்தா… நான் வெடிக்கிறதை நிறுத்தினதுக்கப்புறம்…//
ஹி ஹி ஹி… சரியா சொன்னீங்க.
"சொந்த ஊரில் இருக்கும்போது கேட்டிருந்தால் கூட சில பதில்கள் உருப்படியா வந்திருக்கும். சென்னையில் இருக்கும்வரை, எனக்குத் தீபாவளி என்பது இன்னொரு விடுமுறை நாள், அவ்வளவே."
ithu ungaluku matum illa neraya perukum ithe than
நன்றி ஏஞ்சல்.