பள்ளிக்கூடம் 2 – உப்புமூட்டசண்ட இதன் தொடர்ச்சி… — சின்ன வயதில் பல விளையாட்டுக்கள் விளையாண்டபோதும், இந்தப் பம்பரமும், கோலிக்காயும்தான் வீரவிளையாட்டுக்களாக கருதப்பட்டது எங்களால். அதிலும் பம்பரத்தின்மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகமே. முந்தைய பதிவில் உப்புமூட்டசண்ட விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் (டேய்…. ச்சூ ச்சூ…), இங்கு பம்பரம் விளையாடுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். (இதில் நிறைய விடுபட்டிருக்கலாம், முடிந்தவரை ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறேன்) பம்பரத்தில் வட்டம் பொடியர்களின் விளையாட்டாகக் கருதலாம், இதில் பம்பரத்திற்கு ஆபத்து […]
பள்ளிக்கூடம் 2 – உப்புமூட்டசண்ட
பள்ளிக்கூடம் – இதன் தொடர்ச்சி…—அவற்றுள் முக்கியமானது உப்புமூட்டசண்ட. கொஞ்சம் கட்டுமஸ்தான பசங்க, பொடிப்பசங்கள உப்புமூட்டயா தூக்கிகுவாங்க. நாம எப்பவும் மேலதான். மரத்தடியில் சுற்றி நின்றுகொண்டு ‘ரெடி… ஸ்டார்ட்’ என சொன்னவுடன் ஓடி வந்து ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கொள்வோம். அடுத்தவரை இடித்து கீழே விழச்செய்வதுதான் ஒரே குறி. குதிரை கீழே விழுந்தாலோ, உப்பு கீழே விழுந்தாலோ அவுட். அந்த ஜோடி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரெண்டுமே சேர்ந்து குடைசாயும். இதில் எப்போதும் முக்கியமான நேரம் ஒன்று […]
பள்ளிக்கூடம்
அன்பர் ஜோதி அவர்கள் தொடக்கப்பள்ளி தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். நன்றி ஜோதி. உண்மையை சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் சில மட்டுமே ஞாபகம் இருக்கின்றன. ஆயினும் நினைவில் நிற்பவை யாவுமே பசுமை என்னும் சொல்லை ஞாபகப்படுத்தும் விதமாகவே உள்ளன. எழுத ஆரம்பித்த புதிதில், என்னதான் எழுதுவது என தினமும் யோசித்துக்கொண்டே இருப்பேன். ’எவ்வளவுதான் எழுத முடியும் நம்மால்?’ என்ற கேள்வியும் உண்டு. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அதைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை போலிருக்கிறது. தொடர் தொடர் […]
மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?
————சிம்பிள்1) மேலே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் (காப்பி பண்ண அங்க என்ன இருக்குனு எனக்கும் தெரியல)2)கீழே உள்ளது போல இருவரை அழைக்கவும்.————-அழைக்கப்படுபவர்கள்:1) இதற்கு தூண்டுகோலாய் இருந்த, மேட்டரே இல்லாமல் பதிவு போட்டவரும், மொக்கைகளில் மூச்சடைத்து முங்கி முக்குளித்துக் கொண்டிருப்பவருமாகிய சென்ஷி அவர்கள்2) படத்துக்காக பதிவா, பதிவுக்காக படமா – ரேஞ்சுக்கு பதிவு போடும் பிரியமுடன்……வசந்த் அவர்கள்————- Thank you for reading. 🙂
முடியாது = தெரியாது – பாகம் 2
முடியாது = தெரியாது – பாகம் 1தொடர்ச்சி… அடுத்து ‘அம்பை’ கிளைக்குப் போன் போட்டான். அங்கு சொன்னது கேட்டு நொந்தேபோய்விட்டான்! ’நீங்க இந்தியாவுல எங்க போய் வேனாலும் ரினீவல் பண்ணிக்கலாமே சார்…’அந்த விசயம் கூட பெரிதல்ல, அவர் சொன்ன விதம் அவனை மேலும் சூடாக்கியது. தூத்துக்குடி நண்பனுக்கு போன் போட்டு அனைத்தையும் திரும்ப அனுப்பச் சொன்னான். இரு நாட்களில் கைக்கு வந்த்தது…. இன்னும் இரு நாட்களின் முடியப்போகிறது. திரும்பவும் சென்னையிலிருக்கும் அந்த கிளைக்குச் சென்றான். அதே மாமிதான்,‘மேடம், […]
முடியாது = தெரியாது – பாகம் 1
சென்னைக்கு அவன் வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. பைக் இன்சூரன்ஸ் முடியப் போகிறது, புதுப்பிக்க வேண்டும். அதுவரை அந்த மாதிரியான தேவைகளை அப்பாவே பார்த்துக் கொள்வார். லைசன்ஸ் எடுப்பது, இன்சூரன்ஸ், வெள்ளை அடிப்பது… எல்லாம் அப்பாவே விசாரிப்பார், பேசுவார். அவன் தேவைப்பட்டால் ஏதாவது நேரில் சென்று கொடுப்பது, அல்லது மேலும் விசாரிப்பது. அவ்வளவே. தானே முடிவு எடுக்கும் காலம் வரும் என்று அப்போது அவன் நினைத்துக் கொள்வான். இன்று அந்த நிலையில்தான் இருக்கிறான். ஆனால் பிடிக்கவில்லை. அப்பா […]
Recent Comments