யூனிவர்சலில் ஒரு ஏமாளி

கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை யூனிவர்சலில் மொபைல் வாங்கியிருக்கிறேன். பெரிய கடை, மொத்த விற்பனையாளர், அங்குதான் விலை குறைவாய் இருக்கும் என்றிருந்த மூடநம்பிக்கை. முதல்முறை, புரசைவாககத்தில் இருக்கும் கிளை. இணையத்திலேயே விபரங்கள் எல்லாம் பார்த்து, ஒரு நோக்கியா மொபைல் முடிவு செய்தாயிற்று. காண்பித்தார்கள்…’என்ன விலை?’’9000 ரூபாய்.’’நெட்ல 8000 தான போட்டிருந்தது?’’அது டாக்ஸ் இல்லாம சார்.’இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வாங்கியாயிற்று. (பின்புதான் தெரிந்தது டாக்ஸ் 4%தான் என்று) இரண்டாம் முறை, தீபாவளி சிறப்பு விற்பனை. […]

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – ஆகஸ்ட்08

தகவல்கள் 1) கூகுள் காலண்டரில் ஜீமெயிலில் இருப்பது போன்ற லேப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது கலர் கலரா தீம் வச்சிக்கலாம். 2) கூகுள் எர்த்ல the ocean, the sky, Mars எல்லாம் இருக்காம் (இதுவே இப்பத்தான் தெரியுது), இப்போ the Moon சேத்துருக்காங்களாம். இதுக்கு லேட்டஸ்ட் Google Earth வேணும். 3) Youtube ல இப்போ 3D வீடியோ பாக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதுக்கு ஸ்பெசல் 3D கண்ணாடி வேணுமாம் (அதத் தேடித்தான் அலஞ்சிட்டு இருக்கேன்).ஒரு […]

எனக்கு வந்த கு.த.சே.கள் – 8

1)மகன்: அப்பா, சின்ன வீடுன்னா என்னப்பா?அப்பா: ஏம்ப்பா?மகன்: சும்மா தெரிஞ்சு வச்சுக்கலாம்னுதாம்ப்பா.அப்பா: தெரியாம வச்சுக்கிறதுதாம்ப்பா சின்ன வீடு. 2)நோயாளி: சார், இது உங்களுக்கே ஓவரா தெரியல?டாக்டர்: என்ன?நோயாளி: ஊசி எனக்குப் போட்டுட்டு நர்ஸ் பின்னாடி தடவுறீங்க? 3)ஆடி அதிரடித் தள்ளுபடி.3 sms அனுப்பினால் ஒரு sms திருப்பி அனுப்பப்படும்.5 smsக்கு மேல் அனுப்பும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு பிச்சர் மெசேஜ் ஃப்ரீ.மேலும்,கால் செய்து ’ஹாய்’ சொல்லுங்கள், ஒரு மிஸ்டு காலை இலவசமாக அள்ளுங்கள்.முந்துங்கள், இவை அனைத்தும் பேலன்ஸ் உள்ளவரை […]

பள்ளிக்கூடம் 4 – டிவி டெக் வாடகைக்கு

இப்பல்லாம் என்ன பெரிய ஓபன் தேட்டரு, அப்போ பாத்தோமே அந்த மாதிரி வருமா? பள்ளி நாட்களில் நடந்த சுவையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. தெருவில் எப்போதாவது ஒரு கல்யாணம் நடக்கும். சிலருக்கு எப்படா பந்தி ஆரம்பிக்கும் என்றிருக்கும். ஆனா நம்ம கூட்டத்துக்கோ, எப்படா கல்யாணம் முடியும், எப்படா கேசட் ரிலீஸ் ஆகும்னு இருக்கும். ஒரு வாரத்தில் எப்படியும் கேசட் வந்துவிடும். கல்யாண வீட்டினர் சார்பாக டிவி டெக் வாடகைக்கு எடுக்கப்படும். அவர் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்து, அவர் […]

புரோட்டா ஸ்டால்

சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று. திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்…. ம்ம்ம்ம். சிறிது […]

முன்னோடிகள்

எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருக்கும்? பூமி? உயிர்? மனிதன்? நமக்கு முன் தோன்றிய உயிர்களில், இப்போது நம்முடன் இருப்பவற்றுள் பழமையானது எது? முதன் முதலில் தோன்றிய மனிதன் இவ்வுலகில் எங்கு வாழ்ந்திருப்பான்? முதலில் தோன்றியது ஆணா பெண்ணா? மனிதனில் முதலில் தோன்றியது பெண் என்கிறது விஞ்ஞானம். அப்படியானால் இனப்பெருக்கம்? ஹோமோசேப்பியன் என்றால்? மனிதன் உலகம் முழுவதும் பரவியது ஏன்? கப்பல் இல்லாத அக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எப்படி சாத்தியம்? இமயமலை இருந்த இடத்தில் அதற்கு […]