எட்டு மணி வரை தூங்கிப் பழகிவிட்டேன். இனி ஐந்து மணிக்கே எழ வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை ஓட்ட முடியாது. சிக்கனம் என்பதே மிகச் சிக்கனமாக இருந்த என் மனது, இப்போது தாராளமாக அதைப் பற்றி அசை போடுகிறது. இனி இரவு நேரங்களில் சுற்றுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை நாள்தான் இந்தப் போராட்டம் எனப் பார்த்துவிடலாம். சிலர் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார்கள் என்பார்கள். எனது விசயத்தில் இனி அது சிக்கனத்தைக் குறிக்கும். வரும்காலத்தில் இதன் அர்த்தமே தலைகீழாகப் […]
எவனோ ஒருவனின் வரலாறு
எவனோ ஒருவனின் வரலாறு – கேக்கவே நல்லா இருக்குல்ல? (இல்லன்னாலும் ஆமான்னு சொல்லனும்), அதுக்குத்தான் இப்படி பேர வச்சேன். எவனோ ஒருவன் சொன்னான், எவனோ ஒருவனுடன் போனேன், எவனோ ஒருவன் வந்தான், எவனோ ஒருவன் நல்லா எழுதுறான் (ஆதவா, வேணாம், நிறுத்திக்கிறேன்)…. ஏதோ டாட் காம்னு பேரு கிடச்சுது, அத வச்சதுக்கு அப்புறம் அதுக்கு ஏத்தமாதிரி எவனோ ஒருவன்னு வச்சாச்சு. இப்ப பேரையும் மாத்தியாச்சு. இத சொல்ல ஒரு பதிவு போடனுமேன்னு நெனச்சுட்டு இருந்தப்போதான், நம்ம ஆதவன் […]
நிறம் மாறும் குணங்கள்
சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 – 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு. யார் வீட்டிலாவது […]
தேன்கூடு – 2009/10/31
கூகுளில்…நமது பிலாக்கர் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு சிறு கட்டுரை இதோ. பிற தளங்கள் தரும் விட்ஜெட்டுகள் மூலம் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நம்பத்தகுந்த விட்ஜெட்டுகளை உபயோகிப்பதே நல்லது. நன்றாக இருக்கிறதென்று கிடைத்ததையெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது. நல்லது என எப்படி நம்புவது? கொஞ்சம் கஷ்டம்தான். Widget Codeல் ஏதாவது லிங்க் இருப்பது, அல்லது விளம்பர பாப் அப் விண்டோவை உருவாக்கும் விட்ஜெட்டுகளைத் தவிர்க்கலாம். விட்ஜெட் பாக்ஸ் ஒரு அருமையான விட்ஜெட் தரும் தளமாகும். அதே போல, […]
நறுமண தேவதை – சிறுகதை
இது டீதானா? இனிப்பா, உவர்ப்பா? இல்லை இதுதான் டீயின் சுவையா? ஒன்றும் புரியவில்லை சுதாகருக்கு. கலரைப் பார்த்தான், இதுவரை பார்த்திராத புது நிறமாய் இருந்தது. அதற்கு மேல் குடிக்க மனமின்றி, பாதியோடு வைத்துவிட்டான். நான்கு ரூபாயை வைத்துவிட்டுத் திரும்பினான். இது என்ன நறுமணம்? மெய்மறந்து ஒரு கணம் கண்களை மூடினான். சில்லரையை எடுத்துப் போட்டுவிட்டு கடைக்காரர் கேட்டார், ”சார், நாலு ரூபா குடுத்துட்டுப் போங்க”. திரும்பினான். அந்த மணம் இப்போது இல்லை. ”இப்பத்தான இங்க வச்சேன்”, நிதானமாகக் […]
வேட்டைக்காரன் பாடல்கள்
கடந்த வெள்ளிக்கிழமை, சிவகாசி செல்லும் பஸ். ஏதோ பாட்டு மெல்லிய இசையில் ஓடிக்கொண்டிருந்தது (அது வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைச்சீங்கன்னா தப்பு, அதான் மெல்லிசான்னு சொல்றேன்ல). நாம வழக்கம்போல ஜன்னல் வெளியே வேடிக்கை (அந்த இருட்டுக்குள்ள என்ன பாத்தன்னு கேக்கப்பிடாது, போற வர்ற வாகனங்களைப் பாத்துட்டு இருந்தேன்). சைடுல ஒருத்தர் திட்டுறது கேட்டது… ‘பிச்சக்காரப்பய, போடுறதுக்கு வேற பாட்டே கிடைக்கலயா இவனுக்கு?’ (இப்பவும் வேட்டைக்காரன் பாட்டுன்னு நினைக்க வேணாம்) என்னடான்னு பாட்டக் கேட்டேன், கட்டிப்புடி கட்டிப்புடிடால’ஜிங்கு ஜிக்ச்சா… ஜிக்கு […]
Recent Comments