ஏற்கனவே வானவில் வந்த கதை உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். தெரியாதுன்னா இங்க போயி பாத்துக்குங்க. அதுக்கப்புறம், அங்க பின்னூட்டத்துல கூட சிலபேர் சில தலைப்புகளை சிபாரிசு பண்ணினாங்க. அண்ணன் ஷங்கி என்சிலாடான்னு ஒரு ஐட்டத்த சொன்னாரு. விக்கில பாத்தா ஃப்ரூட் சாலட் மாதிரி தெரிஞ்சது. அப்றம் ஆதவன், இந்த பேரு ஏற்கனவே இருக்குன்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். அப்றம் ஜனா மனோரஞ்சிதம், இராகமாலிகா, பூந்தோட்டம், கூட்டாஞ்சோறு, பலதும் பத்தும், பழக்கூடை இப்படி வரிசையா பின்னிட்டாரு. சாம்ராஜ்ய ப்ரியன் […]
Gmailல் Multiple Signature
Gmailல் Multiple Signature சாத்தியமா? இந்த மாதிரி கேள்வி உங்களுக்கும் இருக்கா? Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை கனெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா? அப்போ மேல (கீழ) படிங்க. ஒன்றுக்கும் மேற்பட்ட Email id களை Gmail ல் பிணைத்து வைக்கும் வசதி இருப்பது ஏற்கனவே தெரிந்த்தே. நான் 5 Email id களை வைத்திருக்கிறேன். Gmail Inbox லேயே எல்லாம் வந்து கொட்டிவிடும். Send பண்ணுவதும் இங்கிருந்தே தேவைப்படும் ஐ.டி. களின் மூலம் அனுப்பி […]
வானவில் – 2009/10/12
கொத்துபரோட்டா, பஞ்சாமிர்தம், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், காக்டெயில், மிக்ஸர், மானிட்டர் பக்கங்கள், அவியல், குவியல், டரியல், என்’ணங்கள், டிபன் (இட்லி, வடை, பொங்கல்….), மிக்ஸ்டு ஊறுகாய், மிக்ஸ்டு ஃப்ரைடு ரைஸ் இப்படி பல பேர் பல தலைப்புல கலவைப் பதிவுகளை எழுதுறாங்க. நான் கூட எழுதிட்டுதான் இருக்கேன் (உண்மையாத்தான்), அது எத்தன பேருக்குத் தெரியும்னு தெரியல. ஆக்கம் 60 நாள் மொக்கை 30 நாள் – எங்கையோ பாத்த தலைப்பு மாதிரி இருக்கா? இதுதான் நம்ம கலவைப் பதிவின் […]
ஒரு சோறு – ஒரு பார்வை
கோடம்பாக்கம் மஹாலிங்கபுரம் பிரதான சாலையில், புதிய மேம்பாலத்திற்கு ஒரு புறத்தில் இருக்கிறது ஒரு சோறு – அசைவ உணவகம். லயோலா கல்லூரியிலிருந்து கோடம்பாக்கம் வரும்போது, பாலத்திற்கு இடதுபுறம் இருக்கிறது, முழுவதும் குளிரூட்டப்பட்ட உணவகம். சென்ற வாரம் ஒரு மதியம் சென்றேன், நண்பனுடன். சாதாரணமாக சாலையில் செல்லும்போது அவ்வளவாகத் தெரியாது; சற்று உள்வாங்கி இருக்கும். அகலம் குறைவான வாசல், உள்ளே சென்றதும் ஐந்து, நால்வர் உட்காரும் மேசைகள். என்னடா இது! இவ்வளவு சிறிய இடமா இருக்கே? இல்லை. உள்ளே […]
தயக்கம், வியப்பு, உற்சாகம், மழை
நான் எழுத ஆரம்பித்த நேரமோ என்னவோ, மூன்று மாதங்களாகப் பதிவர் சந்திப்பே நடைபெறவில்லை. ஒரு வழியாக நேற்று நடந்தது. சந்திப்பு ஐந்து மணிக்கு, மெரினாவில், காந்தி சிலை முன்பு. நான்கு மணிக்கு கேபிள்ஜி சொன்னபடி பதிவர் வெங்கி ராஜாவை அசோக் பில்லரில் கோர்த்துக்கொண்டு மெரினா நோக்கிச் சென்றேன். காந்தி சிலை அடையும்போது மணி 4.45, ஆங்காங்கே மக்கள் கூட்டம். ‘அங்க பாருங்க, கேமராவும் கையுமா நாலு பேரு நிக்கிறாங்க, நம்ம சங்கத்து ஆளுங்களாத்தான் இருக்கும்’, என்றார் வெங்கி. […]
கதையின் சுதந்திரம்
மாப்ள, நேத்து உன்னைப் போல் ஒருவன் படம் பாத்தேன்டா. இதெல்லாம் ஒரு படமா? பிடிக்கவேயில்லடா எனக்கு. தீவிரவாதத்தை தீவிரவாதத்தாலயே அழிக்கிற மாதிரி ஒரு கதை. தீவிரவாதின்னாலே முஸ்லிமாத்தான் காட்டனுமா? ஏன், இந்துத் தீவிரவாதியக் காட்டி, அவன அழிக்கிற மாதிரி காட்டக் கூடாதா? அப்போ தீவிரவாதின்னாலே இந்துதானான்னு கேக்க மாட்டியா? அப்போ ரெண்டு இந்து, ரெண்டு முஸ்லிம்னு காட்டிருக்கலாம். சரி சமமா போய்ருக்கும். அப்போ கமல் இந்து முஸ்லிம் பிரச்சனையக் கிளப்புறார்னு ஒன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா? இல்ல மாப்ள. […]
Recent Comments