நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது. நல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது ஆனால்.. நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால் அந்த நட்பை இழப்பது நலம். ஏனென்றால்.. அது நட்பல்ல நயவஞ்சகம். பி.கு.:- 1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது. தற்போதும் சில […]
சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில்
நான் மிகவும் எதிர்பார்த்த சிறுகதைப் பட்டறை, 13-09-2009 (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நடந்தது. இதைப் பற்றி சில பதிவுகள் வந்துவிட்டன. இருப்பினும் எனது பார்வையில் உங்களுக்கு சிறிது கிடைக்கலாம் என்பதற்காக இந்தப் பதிவு. சொன்னதுபோல மொத்தம் 4 எழுத்தாளர்கள் பேசினார்கள். முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள்இவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டது:* நிறைய படிக்கனும்* ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அதையே தொடரலாம். நல்லா இருக்குன்னு பிறர் சொன்னதற்காக, நமது மண்டையில் ஏறாதவற்றை திணிக்க முயல வேண்டாம்.* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்.* […]
மீனாட்சி பவன்
சென்ற மாதம், ஒரே இடங்களில் மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டது என நண்பன் கூற, கிளம்பினோம் ஒரு தேடலுக்கு. அதில் பிடித்த இடம்தான் இந்த மீனாட்சி பவன். மீனாட்சி பவன் – ஜி.என்.செட்டி சாலையில், ஜெமினி மேம்பாலத்திலிருந்து திநகர் செல்லும் வழியில், புதிய மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் இருக்கிறது.View My Fav Hotels in a larger map அளவு சாப்பாடு 40 ரூபாய். அளவான சாதம், ஒரு சப்பாத்தி, குருமா, சாம்பார், ரசம், காரக் குழம்பு, […]
சந்தர்ப்பவாதக் கொள்ளைகள் – 1
இது சீசன் டைம் ‘என்னடா மாப்ள, தீபாவளிக்கு டிக்கட் போட்டியா?’ ‘இன்னும் இல்லடா’ ‘என்னடா நீயி, இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. இப்படி டிக்கட் எடுக்காம இருக்க? ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டல்ல?’ ‘அதெல்லாம் எடுத்தாச்சு. டிக்கட்டுதான் கெடக்கல. ட்ரெயின் ரெசர்வேசன் ஓபன் பண்ண அஞ்சு நிமிசத்துலயே முடிஞ்சு போச்சாம். இப்ப வெயிட்டிங் லிஸ்ட் பாத்தா 400, 500னு எகுறுது.’ ‘பஸ் என்னடா ஆச்சு?’ ‘அத ஏண்டா கேக்குற… போன தடவ மாதிரி விட்டுறக் கூடாதுன்னு, ஒரு மாசத்துக்கு […]
உன்னை கண்ட நாளிலே
உன்னை கண்ட நாளிலே என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம் உன்னிடம் பேசும் போதெல்லாம் என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம் நீ என் வாழ்வில் கிடைத்த ஒரு இன்ப அதிர்ச்சி நீ என் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவள் உன்னை நான் நினைக்காத நாளோ நேரமோ இல்லை நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன் நம் நட்பு காதலை விட புனிதமானது நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம் பி.கு:- ஒரு தோழிக்கு […]
யூனிவர்சலில் ஒரு ஏமாளி
கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை யூனிவர்சலில் மொபைல் வாங்கியிருக்கிறேன். பெரிய கடை, மொத்த விற்பனையாளர், அங்குதான் விலை குறைவாய் இருக்கும் என்றிருந்த மூடநம்பிக்கை. முதல்முறை, புரசைவாககத்தில் இருக்கும் கிளை. இணையத்திலேயே விபரங்கள் எல்லாம் பார்த்து, ஒரு நோக்கியா மொபைல் முடிவு செய்தாயிற்று. காண்பித்தார்கள்…’என்ன விலை?’’9000 ரூபாய்.’’நெட்ல 8000 தான போட்டிருந்தது?’’அது டாக்ஸ் இல்லாம சார்.’இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வாங்கியாயிற்று. (பின்புதான் தெரிந்தது டாக்ஸ் 4%தான் என்று) இரண்டாம் முறை, தீபாவளி சிறப்பு விற்பனை. […]
Recent Comments