(படம் beta.thehindu.com லிருந்து எடுக்கபட்டது) சென்னையில் வாகன நெரிசலைச் குறைக்க மேம்பாலங்கள் ஆங்காங்கே முளைத்துக்கொண்டே இருக்கின்றன. நல்ல விசயம்தான். ஆனால், அது கட்டி முடிக்கப்படும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் சில பாதைகள் மறைக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் ஏற்படும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் சொல்லமுடியாத அயற்சியைத் தருகிறது. என்ன செய்ய? பல காலத்து நன்மைக்காக சில காலம் கஷ்டம் அனுபவிப்பதில் குறையேதுமில்லை. ஆனால் இதுபோன்று ஏற்படும் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் […]
காட்டுநிற நாட்கள்
கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வாழ்க்கையை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் (க.மு., க.பி.) என்கிறான் நண்பனொருவன். ஏனென்றால் கல்யாணத்திற்குப் பின் பெரிய மாற்றம் இருக்குமாம். மேலும் அவன் கூறியது… ”கல்யாணத்திற்குப் பின் ஒரு ஆணின் சுதந்திரம் அனைத்தும் பறிபோய்விடும். ஆனால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைக்கும். கல்யாணம் ஆன முதல் இரு மாதங்களுக்கு உன்னை வெளியில் பார்க்கவே முடியாது. பின் சில நேரங்களில் பார்க்கலாம். சில வருடங்கள் கழித்து நீயே என்னை போன் செய்து அழைப்பாய் […]
தூக்கம் உன் கண்களை…
ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். […]
புதுத்தகம்
கதிரவன் ஸ்டோர். பள்ளி நாட்களில் மறக்க முடியாத கடை. இந்தக் கடை முதலாளி பெரும்பாலன மாதங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருப்பார். கடையில் ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பார். ஆனால் ஜூன் மாதம் வந்துவிட்டால் அவருக்கும் அவரது கடைக்கும் தனி மவுசு வந்துவிடும். கடையில் அதிகமாக மூன்று பேரைப் போட்டிருப்பார். கடையில் கூட்டம் நிரம்பி வழியும். சொந்தபந்தம், தெரிந்தவர்களெல்லாம் இப்போதுதான் தங்களது நெருக்கத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பார்கள், கடை வாசலில். கதிரவன் ஸ்டோர் ஒரு புத்தகக் கடை. புத்தகக் கடை என்றதும் […]
நிறம் மாறும் குணங்கள்
சிறு வயதில் பேய்ப்படம் பார்ப்பது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும். அன்றைய தினங்களில் (3 – 6 வகுப்புகள் படிக்கும்போது) டிவி டெக் வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் ஒன்று உண்டு. ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்தால் 4-5 கேசட்டுகளை வாங்குவார்கள். அதில் ஒரு ஆங்கில ஆக்சன் படமோ பேய்ப்படமோ கட்டாயம் இருக்கும். ஆக்சன் படம் என்றால் ஜாக்கிசான், புரூஸ்லி படம். பேய்ப்படம் என்றால் இவில் டெட். அவ்வளவுதான் அப்போதைய ஹாலிவுட் அறிவு. யார் வீட்டிலாவது […]
கல்லூரி பூக்கள்
அழகிய கல்லூரி பூக்களில் கல்வியே சிறந்தது என கற்கும் சில, காதல்தான் எல்லாம் என அலையும் சில, கிண்டலால் பிறர் மனதை வருத்தும் சில, கீழான பழக்கங்களால் வருத்தும் சில, குற்றம் கூறியே குறைபடும் சில-வேண்டா கூட்டம் கூடியே அழியும் சில- தானும் கெட்டு அருகிலுள்ளதையும் அழிக்கும் சில, கேவலமான வாழ்க்கையை விரும்பும் சில, கையாலாகாதவை என் பட்டம் பெறும் சில, கொட்டமடித்தே தினம் வட்டம் போடும் சில, கோபமே கொள்ளாமல் அமைதியாய் சில, கெளரவமாய் நடந்து […]
Recent Comments