அன்று ஞாயிற்று கிழமை, வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு” (என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள். அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் […]
காட்டுநிற நாட்கள்
கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என வாழ்க்கையை இரு கட்டங்களாகப் பிரிக்கலாம் (க.மு., க.பி.) என்கிறான் நண்பனொருவன். ஏனென்றால் கல்யாணத்திற்குப் பின் பெரிய மாற்றம் இருக்குமாம். மேலும் அவன் கூறியது… ”கல்யாணத்திற்குப் பின் ஒரு ஆணின் சுதந்திரம் அனைத்தும் பறிபோய்விடும். ஆனால் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் கிடைக்கும். கல்யாணம் ஆன முதல் இரு மாதங்களுக்கு உன்னை வெளியில் பார்க்கவே முடியாது. பின் சில நேரங்களில் பார்க்கலாம். சில வருடங்கள் கழித்து நீயே என்னை போன் செய்து அழைப்பாய் […]
தந்தை, மகன் மற்றும் பயணம்
இரண்டும் சமீபத்தில் பார்த்த படங்கள், அடுத்தடுத்து. அதெப்படி இந்த இரு படங்களும் இவ்வாறு பார்க்க நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டிலும் ஒரு தந்தை, ஒரு மகன், ஒரு பயணம். இரண்டுமே மனதைப் பாதித்த காட்சிகள், முடிவுகள். ஆனால் ஒவ்வொரு கதைக்களமும் முழுதும் வெவ்வேறு, நோக்கம் ஒன்று. முதலில் தி ரோடு. கற்பனைக் களம். உலகம் அழியும் தருவாயில் என்னவெல்லாம் நடக்குமென்கிற கற்பனை. திடீர் திடீரென்று காட்டுத்தீ, நிலநடுக்கம், மழை என மிரட்டும் உலகம். […]
ஆறு கேள்விகள் ஏழு பதில்கள்
ஒருவனுக்கு ஒருத்திஎன்றான்ஏனென்றேன்ஒழுக்கமென்றான்ஒருத்தி இறந்தால்என்றேன்இன்னொருத்தியென்றான்ஒருவன் இறந்தால்என்றேன்ஒருத்திதானென்றான்சமனில்லை என்றேன்ஒழுக்கமென்றான். ஒருவனுக்கு ஒருத்திஎன்றாள்ஏனென்றேன்விருப்பமென்றாள்ஒருத்தி வெறுத்தால்என்றேன்இன்னொருத்தனென்றாள்விரும்பினாலும் கூடசேர்த்துக்கொண்டாள்ஒருத்தியின் அவனுக்குஎன்றேன்அவன் விருப்பம்என்றால்சமநிலையோ? சமநி(ல்)லை. -அதி பிரதாபன். Thank you for reading. 🙂
கோவா – சிரிக்க மட்டும்
கோவா – உண்மையிலேயே சரியான பெயர்தான். இரண்டு முறை இதுவரை கோவா சென்றிருக்கிறேன். அதில் ஒரு தடவை குடும்பத்துடன். ஹ்ம்ம்ம். இன்னொரு தடவை கல்லூரி நாட்களில், அதகளம். போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. ஆனா திரும்பி வரும்போது ஜாலியா இருந்ததா ஒரு ஞாபகம். காசெல்லாம் ’தண்ணியா’ செலவாகி வெறுங்கையா இருந்தது அந்தப் பயணம். ஆனா வெறுமையா இல்லை. சரி கோவா படத்துக்கு வருவோம். ஏற்கனவே வெங்கட்டோட படங்கள் இரண்டு பாத்ததுனால, கதை இருக்காதுன்னு தெரிஞ்சுதான் போனேன். என்னோட […]
நாணயம் மற்றும் The Bank Job
நாணயம் எந்த எதிர்பார்ப்புமில்லாது சென்ற படம். ஆரம்பம் முதலே திரையில் பயங்கர ரிச்னஸ். வந்த இடங்கள் எல்லாம் என்னைப் போன்ற சாமானியர்கள் பார்க்காத இடங்கள். ஆனால் கதையின் ஓட்டத்திற்குள் தானாக சென்றுவிட்டேன். ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரசன்னா. உலகத்திலேயே பாதுகாப்பான பெட்டக வசதியை வடிமைத்து அந்த வங்கியில் செயல்படுத்துகிறார். சொந்தமாகத் தொழில் தொடங்க இரண்டு கோடி வங்கி கடனுக்காக காத்திருக்கிறார், அதே வங்கியில். திடீரென முளைக்கும் காதல். காதலிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி […]
Recent Comments