ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – செப்18

Published by: 18

தகவல்கள்

* Gmail ல ஏற்கனவே பல தீம்கள் வந்திருப்பது நமக்குத் தெரிந்ததே… இப்போது Random Themes வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு Theme ல் gmail உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இங்கு, உங்களுக்குப் பிடித்தமான Theme கலை மட்டும் தேர்வு செய்யும் வசதி இல்லை.

* அடுத்து மிகவும் நான் எதிர்பார்த்த ஒன்று. WordPress ல் மிகவும் நீளமான பதிவிற்கு Read More கொடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம், முகப்புப் பக்கம் நீளமாக இருப்பதைத் தவிர்க்க முடியும். இந்த வசதி இப்போது நமது Blogger லும் வந்துவிட்டது.  இது போல…
இதற்கு தற்போதிருக்கும் New Post Editor ஐ ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். பழைய editor வைத்திருப்பவர்களும் இதை உபயோகிக்கலாம் இப்படி – Edit HTML சென்று Break வர வேண்டிய இடத்தில் <!– more –> என டைப் செய்தால் போதும். மேலும் இது RSS ல் படிக்கும் வடிவத்தை மாற்றிவிடாது. ரீடரில் படிப்பவர்கள் எனது தளத்திற்கு வந்து பார்க்கவும். இனி வரும் அனைத்துப் பதிவுகளுக்கும் நான் இதை உபயோகிக்கலாமென இருக்கிறேன்.

* மேலும் New Post Editor மிகவும் அருமையாக உள்ளது. Settings -> Basics -> Select post editor சென்று Latest ஐ தேர்வு செய்து உபயோகித்துக்கொள்ளலாம்.


அனுபவம்

சென்ற வாரம் ஹாரிங்டன் சாலையில் இருக்கும் ஒரு சப்வே (பெயர் தெரியவில்லை) அருகில் இருக்கும் ஒரு ஓட்டலுக்கு தங்கை அழைத்துச் சென்றாள். பெயர் சுப்ரபா. குறுகிய மாடிப்படி வழியே செல்லும்போதே நமக்கு திகில்… அவ்வளவு அகலமான பாதை. இரண்டாவது மாடி, முதலில் டோக்கன் வாங்கினோம். உள்ளே சென்றால், சிறிய மர மேசைகளும், நாற்காலிகளுமாக வரிசையாக போடப்பட்டிருந்தன. வேகமாக பறிமாறுதல் நடந்தது. ஆஹா… இடண்டு கூட்டு, துவையல், பெரிய அப்பளம், இலை நிறைய சோறு, ஊறுகாய். முதலில் பருப்பும், நெய்யும். பின்பு சாம்பார்… அந்த சாம்பார் ஒன்றே போதும் எனக்கு, நல்ல சுவை. மோர் கேட்கும் வரை தரப்பட்டது (புரசை டவுட்டன் ஓட்டலில் இரண்டாம் முறை மோர் கேட்டாலே, சர்வர் அவனுடைய சொத்து போவதுபோல வெறுப்பாகப் பார்ப்பான்). இனிப்புதான் இல்லை, கேட்டதற்கு ஞாயிறு மட்டுமே பாயாசம் இருக்குமாம். குறைந்த செலவில், வயிறு முட்ட, சுவையான மதிய சைவ சாப்பாடு சாப்பிட உகந்த இடம்.


மனதில் உதித்தது…

அவள்
அவளுக்காகவும் கவலைப்பட்டால்
கேள் பிரண்ட்.
அவளுக்காகவே கவலைப்பட்டால்
காதலி.
அவளால் கவலைப்பட்டால்
மனைவி.


கடைசியாக ஒரு SMS

காதலியின் கண்ணசைவிற்கு
ஆயிரம் அர்த்தங்கள்.
ஆனால்,
நண்பனின் கண்ணசைவிற்கு
ஒரே அர்த்தம்,

’மச்சான், சூப்பர் ஃபிகரு வருது, டக்குனு திரும்பிப் பாக்காத’.


-ஏனாஓனா.

Thank you for reading. 🙂

18 comments

  1. Anonymous

    டேய் மச்சா கலக்கறா டா, சிறுகதை பட்டறைக்கு கொண்டுவந்த நோட்டு தொலஞ்சு போட்சு டா அதான் லேட். சுப்பர் பதிவு மாபி எப்ப அந்த உணவகத்துக்கு போலாம்

  2. Beski

    மச்சி அடலேறு,
    இன்னுமா நோட்டு தொலைக்கிற? சின்னப்புள்ளத் தனமல்ல இருக்கு!

    //எப்ப அந்த உணவகத்துக்கு போலாம்//
    அதப்பத்தி போன்ல பேசலாம்… pbeski@gmail.com க்கு நம்பர் அனுப்பி வைக்கவும்.

  3. Ammu Madhu

    //இடண்டு கூட்டு, துவையல், பெரிய அப்பளம், இலை நிறைய சோறு, ஊறுகாய். முதலில் பருப்பும், நெய்யும். பின்பு சாம்பார்… அந்த சாம்பார் ஒன்றே போதும் எனக்கு, நல்ல சுவை. மோர் கேட்கும் வரை தரப்பட்டது //

    அட கடவுளே!!!அனுபவிங்க ராசா..

    அன்புடன்,

    அம்மு.

  4. க.பாலாசி

    தகவல் அனுபவம் நல்லாருக்கு…

    //அவளுக்காகவும் கவலைப்பட்டால்
    கேள் பிரண்ட்.
    அவளுக்காகவே கவலைப்பட்டால்
    காதலி.
    அவளால் கவலைப்பட்டால்
    மனைவி.//

    உங்கள் மனதில் பட்டது அனுபவத்தில் பட்டதுபோல தெரிகிறது. அப்படியா?

    கடைசியில் உள்ள sms அருமை….வாழ்த்துக்கள் அன்பரே….

  5. Beski

    நன்றி அம்மு.
    //அட கடவுளே!!!அனுபவிங்க ராசா..//
    ஏதோ, இப்படி தேடிப்பிடுச்சு அனுபவிச்சுட்டு இருக்கேன்.

    நன்றி பாலாஜி.
    //உங்கள் மனதில் பட்டது அனுபவத்தில் பட்டதுபோல தெரிகிறது. அப்படியா?//
    முதல் இரண்டு அனுபவம், கடைசி கற்பனை, அதை அனுபவித்தவர்கள்தான் சொல்லனும்.

  6. கிரி

    //இந்த வசதி இப்போது நமது Blogger லும் வந்துவிட்டது. இது போல… //

    ரொம்ப நன்றிங்க..தகவலுக்கு

    எனக்கு புது எடிட்டர் மாற்றியதால் நீண்ட நாட்களாக இருந்த ஃபார்மட் பிரச்சனை சரி ஆகி விட்டதாக நினைக்கிறேன்.

    அடுத்த முறை இடுகை இடும் போது தான் தெரியும்..உங்கள் உதவிக்கு நன்றி

    செயல்படுத்தி பார்த்து விட்டு கூறுகிறேன்

  7. Beski

    நன்றி கிரி.
    நானும் இப்போதுதான் புது எடிட்டருக்கு மாறியிருக்கிறேன். உபயோகித்துப் பார்த்தபின் அதைப் பற்றி தனியாகக் கூறும் யோசனை உள்ளது.

  8. Beski

    நன்றி ராஜ்.
    அட… ஏன் நிறுத்துறீங்க, நேரம் கிடக்கும்போது எழுதுங்க. இன்னும் நிறைய வசதிகள் வரப்போகுது.

  9. Unknown

    தகவல்க​ளைத் தூக்கித் தூரப்​போடும்.. அது யார் ​வேணாலும் எழுதலாம்! ஆகா இந்த அனுபவம்? சுப்ரபா.. ​பெரிய அப்பளம்… அன்லிமிட்​டெட் ​மோர்.. Who can write?? நீங்கதான் எழுத முடியும்! அதுக்குதான் நான் ரசிகன், அடி​மை எல்லாம்!
    ***
    "டக்குன்னு திரும்பிப் பாக்கா​தே" எவ்வளவுதான் உஷார் பண்ணினாலும் நம்ம ஆளுங்கிட்ட எதிர்பார்க்கவே முடியாத அம்சம் இதுதான்!

  10. Beski

    //☀நான் ஆதவன்☀ said…

    sms superrr mappi//
    உன்னப்பத்தி தெரியும் மாப்பி…
    இதப் பத்தி மட்டும்தான் நீ கமண்டு போடுவன்னு.
    🙂

  11. Beski

    ஜெ மாம்ஸ்,
    //அதுக்குதான் நான் ரசிகன், அடி​மை எல்லாம்!//
    நீங்களும் அந்தப் பக்கம் நல்ல ஹோட்டலா தேடி அலைவீங்க போல இருக்கே…

    //எவ்வளவுதான் உஷார் பண்ணினாலும் நம்ம ஆளுங்கிட்ட எதிர்பார்க்கவே முடியாத அம்சம் இதுதான்!//
    சொல்றதப் பாத்தா, எவ்ளோ உஷாரா சொன்னாலும் டக்குன்னு திரும்பிப் பாத்து, சொன்னவனுக்கு ஆப்பு வைப்பீங்க போல இருக்கே!
    🙂

  12. கிரி

    எனக்கு இருந்த ஃபார்மட் பிரச்சனை சரி ஆகி விட்டது..நன்றிகள் கோடி

    இந்த பிரச்சனை நான் வலைப்பதிவு ஆரம்பித்த நாளில் இருந்து இருக்கிறது..இதனால் ஒவ்வொரு முறை பதிவிடும் போதும் அதை align செய்வதற்குள் செம கடியாக இருக்கும்..எல்லாம் செய்த பிறகு தெரியாம கம்போஸ் பகுதியில் கை வைத்து விட்டால் மொத்த ஃபார்மட்டும் மாறி விடும்…

    பொதுவா நான் எந்த புதிய முறை வந்தாலும் பயன்படுத்தி பார்த்து விடுவேன்..இந்த விஷயம் வெளியே குறிப்பிடாமல் உள்ளே இருந்ததால் நான் கவனிக்கவில்லை..வேறு எங்கேயும் படிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இப்போது (என் கடந்த இடுகை) எளிதாக முடிகிறது..

    மீண்டும் ஒரு முறை நன்றி

  13. Beski

    அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கிரி.

    லிங்க் கொடுப்பதும் நன்றாக இருக்கிறது. படங்கள் வைப்பது பற்றி இனிமேல்தான் பார்க்கனும், Preview பார்ப்பது அருமையாக இருக்கிறது.

    இன்னொன்று சொல்ல வேண்டும். Read more உபயோகித்துப் பார்த்தேன்… பிரச்சனை வருகிறது. அதனால் இனி உபயோகிப்பது சந்தேகமே. பழைய பதிவுகளில் இருந்தும் எடுத்துவிட்டேன்.

Leave a Reply