இப்பல்லாம் என்ன பெரிய ஓபன் தேட்டரு, அப்போ பாத்தோமே அந்த மாதிரி வருமா? பள்ளி நாட்களில் நடந்த சுவையான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. தெருவில் எப்போதாவது ஒரு கல்யாணம் நடக்கும். சிலருக்கு எப்படா பந்தி ஆரம்பிக்கும் என்றிருக்கும். ஆனா நம்ம கூட்டத்துக்கோ, எப்படா கல்யாணம் முடியும், எப்படா கேசட் ரிலீஸ் ஆகும்னு இருக்கும். ஒரு வாரத்தில் எப்படியும் கேசட் வந்துவிடும். கல்யாண வீட்டினர் சார்பாக டிவி டெக் வாடகைக்கு எடுக்கப்படும். அவர் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்து, அவர் […]
புரோட்டா ஸ்டால்
சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று. திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்…. ம்ம்ம்ம். சிறிது […]
முன்னோடிகள்
எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவாகியிருக்கும்? பூமி? உயிர்? மனிதன்? நமக்கு முன் தோன்றிய உயிர்களில், இப்போது நம்முடன் இருப்பவற்றுள் பழமையானது எது? முதன் முதலில் தோன்றிய மனிதன் இவ்வுலகில் எங்கு வாழ்ந்திருப்பான்? முதலில் தோன்றியது ஆணா பெண்ணா? மனிதனில் முதலில் தோன்றியது பெண் என்கிறது விஞ்ஞானம். அப்படியானால் இனப்பெருக்கம்? ஹோமோசேப்பியன் என்றால்? மனிதன் உலகம் முழுவதும் பரவியது ஏன்? கப்பல் இல்லாத அக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எப்படி சாத்தியம்? இமயமலை இருந்த இடத்தில் அதற்கு […]
Recent Comments