அதே மாலை நேரம், அதே காற்று, அதே கடல் அலை, அதே கால் தடங்கள் மணலில்- என் காதலியினுடையது. அன்று தொலைவில் கண்ட தடங்கள் நேற்று அருகில் வந்த தடங்கள் இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள். அன்று உன் காலடி தடங்களாலேயே உன் வருகையை அறிந்தவன் நான். இன்று பின்தொடர்கிறேன் உன் தடங்களை, உனக்குத்தெரியாமல். சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின் கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ சரணடைந்தவனின் கால் தடத்தோடு. ஆண்டுகள் பல உருண்டோடின, […]
வெண்குழல் ஊதுபத்தி ——–(1)
வெள்ளையாய் ஒரு குழல்- அதில் விடுகிறான் புகைச் சுழல்- அது உருவாவதை கண்டு மகிழ்கிறான் -ஆனால் தான் உருகுவதை அறிய மறுக்கிறான் நண்பனே ! அதன் மென் புகை போல் உன் மென்னுயிரும் தினம் மென்மையாக அழிவதை ஏன் உணர மறுக்கிறாய்?! நாம் அதனை வேகமாக உறிஞ்சுவதால் நம்மை அது வேகமாக உறிஞ்சிவிடுகிறது உலகத்திலிருந்து விதவை என்று வாழ்வளித்தால் அவள் விளக்கேற்றுவாள்- இல்லை இல்லை அவளே விளக்காவாள்- ஆனால் வாழ்வளித்தவனின் உயிரையே அணு அணுவாக சுவைத்தளிப்பாள் பி.கு:- […]
அன்று ஓரு இரவில்………(3)
நண்பர்கள் சொன்ன போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, நடுவில் வெளிச்சத்தை பார்த்து பயந்தாலும் சுடுகாட்டிற்கு சென்று பூவை பறித்து, பின் என்னுடைய அறைக்குச்செல்லலாம் என கிளம்பினேன். கிளம்பிய 5 நொடிக்குள் அங்கு சட சடவென வித்தியாசமான சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தால் எரிந்துக்கொண்டிருந்த பெண்ணின் உடல் எழும்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து நான் பயந்தேன் என யாராவது நினைத்தால் தவறு. உடலை எரிக்கும்போது அப்படி எழும்பும் என்பது எனக்கு தெரியும், அதனால் பயப்படவில்லை. சுடுகாட்டில் அந்தக்காட்சியை பார்த்துவிட்டு நான் நடக்க […]
Recent Comments