யூனிவர்சலில் ஒரு ஏமாளி

கடந்த ஒரு வருடத்தில் நான்கு முறை யூனிவர்சலில் மொபைல் வாங்கியிருக்கிறேன். பெரிய கடை, மொத்த விற்பனையாளர், அங்குதான் விலை குறைவாய் இருக்கும் என்றிருந்த மூடநம்பிக்கை. முதல்முறை, புரசைவாககத்தில் இருக்கும் கிளை. இணையத்திலேயே விபரங்கள் எல்லாம் பார்த்து, ஒரு நோக்கியா மொபைல் முடிவு செய்தாயிற்று. காண்பித்தார்கள்…’என்ன விலை?’’9000 ரூபாய்.’’நெட்ல 8000 தான போட்டிருந்தது?’’அது டாக்ஸ் இல்லாம சார்.’இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என வாங்கியாயிற்று. (பின்புதான் தெரிந்தது டாக்ஸ் 4%தான் என்று) இரண்டாம் முறை, தீபாவளி சிறப்பு விற்பனை. […]