வானம்

அவள் மிக அழகானவள்.நீளமாய் இருப்பாள், நீலமாய் இருப்பாள். மிகவும் பிரகாசமான சூரியனைப் பொட்டாகக் கொண்டிருப்பாள், அந்தப் பொட்டின் நிறம் அவளது மனநிலையக் காட்டும்.சில நேரங்களில் மஞ்சளாய் மங்களகரமாக, சில நேரங்களில் சிவப்பாய் பத்திரகாளியாக, சில நேரங்களில் பெரிதாய் பட்டிக்காடு போல, சில நேரங்களில் சிறிதாய் பட்டணம் போல. அவள் வெட்கப்படும்போது கூந்தலை அள்ளி முகத்தை மறைத்துக்கொள்வாள்.அந்தக் கூந்தல் கருமையாகவோ, வெண்மையாகவோ, இரண்டும் கலந்தோ அல்லது அவளது பொட்டின் நிறத்தை உள்வாங்கி, அழகிய வர்ண மாயாஜாலம் செய்ததுபோலவோ இருக்கும். […]