வெண்குழல் ஊதுபத்தி ——–(1)

Published by: 7

வெள்ளையாய் ஒரு குழல்- அதில்

விடுகிறான் புகைச் சுழல்- அது
உருவாவதை கண்டு மகிழ்கிறான் -ஆனால் தான்
உருகுவதை அறிய மறுக்கிறான்




நண்பனே !
அதன் மென் புகை போல்
உன் மென்னுயிரும்
தினம் மென்மையாக அழிவதை
ஏன் உணர மறுக்கிறாய்?!



நாம் அதனை வேகமாக உறிஞ்சுவதால்
நம்மை அது வேகமாக உறிஞ்சிவிடுகிறது
உலகத்திலிருந்து

விதவை என்று வாழ்வளித்தால்

அவள் விளக்கேற்றுவாள்- இல்லை இல்லை
அவளே விளக்காவாள்- ஆனால்
வாழ்வளித்தவனின் உயிரையே
அணு அணுவாக சுவைத்தளிப்பாள்


பி.கு:-
இவையெல்லாம் நான் 1996-ல் இரவு நேரம் கையில் தம்முடன்,
தம் பிடித்து கிறுக்கியது.



—கி.கி

Thank you for reading. 🙂

7 comments

  1. Unknown

    லக லக லகலக முடிஞ்சு அடுத்த ரகளையா இது?? கவிதை எழுதின வருஷத்தை (1996) பாக்கும் போது…. இப்ப கவிதை பயங்கரமா எழுதுவீங்கன்னு தோணுது. நான் 1996ல் எழுதிய சிகரெட் கவிதை….. என் காதலி(கள்) பெயரை சிகரெட்டில் எழுதி புகைப்பேன்..!!

  2. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //குறை ஒன்றும் இல்லை !!! ..
    ஐயா.. எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. ஏன்னா நான் இத பிடிக்க மாட்டேனே!!!\

    நீங்க பிடிக்கலன்னா என்ன, நாங்க பக்கத்துல இருந்து பிடிப்போமில்ல. எப்பூடீ

  3. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    ஜெகநாதன்
    //இப்ப கவிதை பயங்கரமா எழுதுவீங்கன்னு தோணுது\

    இப்ப அதிகமாக எழுதுவதில்லை

    //என் காதலி(கள்) பெயரை சிகரெட்டில் எழுதி புகைப்பேன்..!!\

    காதலி என்பவள் உயிருக்கு ஆபத்தானது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். நன்றி

  4. Unknown

    // நீங்க பிடிக்கலன்னா என்ன, நாங்க பக்கத்துல இருந்து பிடிப்போமில்ல. எப்பூடீ //

    பாவிகளா..! எத்தினி பேரு கிளம்பியிருகீங்க, இப்பூடி??

  5. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )

    //எழில். ரா said…
    // நீங்க பிடிக்கலன்னா என்ன, நாங்க பக்கத்துல இருந்து பிடிப்போமில்ல. எப்பூடீ //

    பாவிகளா..! எத்தினி பேரு கிளம்பியிருகீங்க, இப்பூடி??\

    2 பேர்
    1.எவனோ ஒருவன்
    2.கிருக்கல் கிறுக்கன்

Leave a Reply